
கள்ளக்குறிச்சியில் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணிக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா முன்னிலை வகித்தார். கடந்த 2021ம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் பொறுப்பேற்றவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். அவரின் பணிகள் மற்றும் சேவையை பாராட்டி விழாவில், கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., நினைவுப்பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.