கொடியாலத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பொன்விழா
ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து கொண்டாட்டம்;
நாகை மாவட்டம் கொடியாலத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின், பொன்விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக, நேற்று கீழ்வேளூர் லயன்ஸ் சங்கம் சார்பில், தலைமை ஆசிரியர் ஓய்வு முருகேசன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஐயப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் மீ.கல்பனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சிராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரா.தமிழரசன், முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் அருள்தாஸ், குமரேசன் மற்றும் ராதிகா, ஈஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் வைரப்பன் மற்றும் சுதா ஆகியோர் கலந்து கொண்டு, மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.