தபால்காரர் மீது தாக்குதல் : பைக் உடைப்பு வாலிபர் கைது!

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற தபால்காரரை தாக்கி அவரது பைக்கை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-01 08:09 GMT
தபால்காரர் மீது தாக்குதல் : பைக் உடைப்பு வாலிபர் கைது!
  • whatsapp icon
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற தபால்காரரை தாக்கி அவரது பைக்கை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் 2வது தெருவில் வசிப்பவர் சுப்பையா இவரது மகன் பேச்சிமுத்து (76). இவர் தபால்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான வீட்டில் தூத்துக்குடி தாளமுத்து நகர் பெரிய செல்வம் நகரை சேர்ந்த தம்பி ராஜ் மகன் மணிமுத்து (35) என்பவர் வாடகைக்கு குடியிருந்தாராம். பின்னர் அவர் வீட்டை காலி செய்த போது அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டபோது பேச்சிமுத்து இந்த வீட்டுக்கு புதிதாக வருபவர்களிடம் அட்வான்ஸ் வாங்கி உங்களுக்கு தருகிறேன் என்று கூறினாராம். அதற்கு மணிமுத்து நான் வீட்டை காலி செய்தவுடன் நீங்கள் எனக்கு பணத்தை தந்து விட வேண்டும் என்று கூறினாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மணி முத்து பேச்சிமுத்துவை கல்லால் தாக்கி அருகில் இருந்த அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினாராம். இதில் காயமடைந்த பேச்சிமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து மணிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News