குலசை முத்தாரம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2025-04-01 12:14 GMT
குலசை முத்தாரம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
  • whatsapp icon
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு  சாமி தரிசனம் செய்தார்.  தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு நேற்று காலையில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள விநாயகர் கோவிலுக்கும் சென்று வழிபட்டார். முன்னதாக அவர் நேற்று முன்தினம் இரவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் யோகிபாபு ‘‘திருச்செந்தூர் முருகப் பெருமான் எனக்கு தொடர்ந்து வெற்றியை தந்து கொண்டிருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் படத்திலும் நடித்து வருகிறேன். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படம் அருமையாக வந்துள்ளது. அதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்’’ என்றார்.

Similar News