ராசிபுரம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம்..
ராசிபுரம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம்..;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர்மன்றத்தின் அவரசக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சூ.கணேசன் முன்னிலை வகித்தார். ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாக கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநில நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (SUIDF) கீழ் ரூ.2.53 கோடி கடன் பெறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் வேகத்தடை அமைத்தல், தார்சாலை அமைத்தல் போன்றவை குறித்து வலியுறுத்தினர்.