குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
மதுரை அருகே குடிநீர் வசதி கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென வாடிப்பட்டி அலங்காநல்லூர் பிரதான சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் இன்று (ஏப்.1)ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. தற்காலிகமாக வாகனத்தில் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டது மக்கள் தற்காலிக குடிநீர் எங்களுக்கு வேண்டாம் நிரந்தர குடிநீர் தான் எங்களுக்கு வேண்டும் என அந்த வாகனத்தை திருப்பி அனுப்பினர். இதனால் அப் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.