ராமநாதபுரம் மாற்றுத்திறனாளி அமைச்சருக்கு நன்றி

அமைச்சரின் பரிந்துரையில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்து அவர்கள் மூன்று சக்கர வாகனம் வளங்கள்;

Update: 2025-04-01 15:09 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி ஊராட்சி ஒன்றியம் கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்து அவர்கள் மூன்று சக்கர வாகனம் வேண்டி மனு அளித்தார். மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் அவர்களின் பரிந்துரை பேரில் 29.03.2025 சனிக்கிழமை மூன்று சக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ‌ முத்து அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் .

Similar News