கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-04-01 16:45 GMT
கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  • whatsapp icon
திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திண்டுக்கல் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திண்டுக்கல் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் 1993 ஆண்டு தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் மூன்று வேளாண்மை அலுவலர்கள், ஒரு ஆய்வக உதவியாளர்கள் மற்றும் ஒரு தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். ஆய்வின் போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) பாண்டியன், செயற்பெறியாளர் தங்கவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.

Similar News