மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் கைது

கைது;

Update: 2025-04-01 17:12 GMT
கும்பகோணம் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டா் ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், செட்டி மண்டபம் நாச்சியாா்கோவில் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த 33 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண் வீட்டில் தனியாக இருந்தாா். இதை தெரிந்து கொண்ட சன்னாகுளம் குடியானத் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் மணி (எ) மணிகண்டன் (35 ) மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். வேலைக்குச் சென்ற தாயாா் வீடு திரும்பியதும், பாதிக்கப்பட்ட பெண், தாயாரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளாா். இது குறித்து தாயாா் ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் துா்கா வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

Similar News