மூலஸ்தானம் செல்ல பக்தர்களுக்கு தடை

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் மூலஸ்தானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update: 2025-04-02 02:41 GMT
மூலஸ்தானம் செல்ல பக்தர்களுக்கு தடை
  • whatsapp icon
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆனி 30 ஆம் நாள் ஜூலை 14 ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. திருப்பணிகள் செய்ய ஏதுவாக, பங்குனி மாதம் 26 ஆம் நாள் ஏப்ரல் 9 ஆம் தேதி மூலாலய பாலஸ்தாபனம் செய்யப்படவுள்ளது. இதனால் திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம். சண்முகர் சண்முகர் சன்னதி ஆகிய மண்டபகங்களிலுள்ள உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் கலாகர்ஷணம் செய்யப்பட்டு, சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிக மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு அனைத்து தெய்வங்ககளின் தாருபிம்பத்திற்கு (மூலவர் அத்தி மரச்சிற்பங்கள்) மூலஸ்தானத்தில் நடைபெறுவது போல் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் வழக்கம் போல், ஆகம விதிப்படி நடைபெறும் என இத்திருக்கோயில் ஸ்தானிகபட்டர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மூலஸ்தான பாலாலயத்தை முன்னிட்டு வருகின்ற வரும் 7 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் பாலாலய யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு ஜூலை 14-ஆம் தேதி திருக்குடமுழுக்கு பணிகள் முடியும் வரை திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய இடங்களில் மராமத்து மற்றும் திருப்பணிகள் நடைபெற உள்ளதால், திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News