நெகிழி பயன்பாடு: கடைகளில் திடீர் ஆய்வு
மதுரை வாடிப்பட்டி பகுதியில் பாலீத்தீன் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது;

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில்,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிஷ் நிர்மல் குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில், நேற்று (ஏப்.1)சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன் சக்கரவர்த்தி, சதீஸ், புவனேஸ்வரன் ஆகியோர் கோழிக்கடை, பலசரக்குகடை, ஓட்டல்,காய்கறி கடை, மற்றும் டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற் கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது .இது தொடர்பாக அனைத்து கடைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.