சங்கரன்கோவிலில் காளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது
காளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஓடை தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த வாரம் 25-ம் தேதி காலையில் காப்பு கட்டுதலுதடன் தொடங்கியது. இந்த விழா நாட்களில் காலையில் மாலையிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இது தொடர்ந்து நேற்று இரவு பூ வளர்த்தல், தீர்த்த குடங்கள் அழைத்தல், பால்குடம், முளைப்பாரி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இந்த நிகழ்ச்சிகள் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.