கடன் வாங்கி தருவதாக மோசடி பெண் கைது

கைது;

Update: 2025-04-02 03:35 GMT
கடன் வாங்கி தருவதாக மோசடி பெண் கைது
  • whatsapp icon
விருத்தாசலம் அடுத்த விசலுாரை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பானுமதி, 35; இவர், உளுந்துார்பேட்டை, நிதி நிறுவன ஏஜெண்ட் எனக்கூறி, கடன் வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று, ஏமாற்றி வந்தார். அந்த வகையில் உளுந்துார்பேட்டை அருகே தேன்குணத்தை சேர்ந்த உதயகுமார் மனைவி அனுசுயாவிடம், கடன் வாங்கி தருவதாகவும், முன்பணம் கொடுக்க வேண்டும் என கூறி, 46 ஆயிரத்து 500 ரூபாயை பெற்றார்.அதேபோல சாமிநாதன் மனைவி தமிழரசியிடம் ரூ. 20,500; நாகராஜ் மனைவி ஜனதாவிடம் ரூ. 7,500; இளங்கோவன் மனைவி பவ்யாவிடம் ரூ 60,000; பாலு மனைவி உமாவிடம் ரூ.10,000; பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலையிடம் ரூ.12,000 வாங்கி ஏமாற்றியுள்ளார். பணம் கொடுத்தவர்கள் பலமுறை தொடர்பு கொண்ட போதும் போனை எடுக்காமல் இருந்தார். இந்நிலையில் தமிழரசி, வேறொரு மொபைல் போன் எண்ணில் பானுமதியை தொடர்பு கொண்டு, கடன் வேண்டும் எனக்கூறி, அவரை உளுந்துார்பேட்டைக்கு வர வைத்தார். விருத்தாசலம் சாலை, தனியார் வங்கி அருகே நேற்று மதியம் 1:00 மணிக்கு பானுமதி வந்தபோது தமிழரசி உள்ளிட்ட பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரை பிடித்து, உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Similar News