அடையாள அட்டை பதிவு வேளாண் அதிகாரி தகவல்

தகவல்;

Update: 2025-04-02 03:41 GMT
அடையாள அட்டை பதிவு வேளாண் அதிகாரி தகவல்
  • whatsapp icon
திருக்கோவிலுார் விவசாயிகள் வரும் 5 ம் தேதிக்குள் அடையாள எண் முகாமில் பதிவு செய்ய வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட்டாரத்தில் விவசாயிகளுக்கான அடையாள எண் பதிவு செய்யும் முகாம் வருவாய் கிராமங்களில் நடக்கின்றன. இதில் விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விபரங்கள் இணைத்து தேசிய அளவிலான அடையாள எண் வழங்கப்படும். வேளாண்மை அலுவலர்களால் நடத்தப்படும் முகாமில் கலந்து கொண்டு எந்தவித கட்டணமும் இன்றி வரும் ஏப்.5ம் தேதிக்குள் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News