கண்ணு வலி விதைகளை அரசே கொள்முதல் செய்யுமா?
கண்ணு வலி விதைகளை அரசே கொள்முதல் செய்யுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு;
புற்றுநோய் மருந்துகள் தயாரிப்பின் முக்கிய உட்பொருளான கண்வலி விதை(செங்காந்தள் மலர்ச்செடிகள்) சாகு படியில் மூலனூர் ஒன்றியப் பகுதி முன்னிலை வகிக்கிறது. சுமார் 2,500 ஏக்கருக்கும் மேலாக இப்பகுதியில் கண்வலி விதை பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை கிலோ ரூ.2,800 முதல் ரூ.3,200 வரை விற்பனையான நிலையில், கடந்த 2 வருடங்களாக இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு கிலோ ரூ.1,700-க்கு கொள்முதல் செய்துவிட்டனர். ஏற்கனவே கிழங்குகள் மருந்துகளின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு ஆகியவற்றால் தடுமாறிக்கொண்டு இருந்த விவசாயிகள், வியாபாரிகளின் மோசடியால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். தற்போது இந்த ஆண்டுக்கான விதைகளை சாகுபடி செய்து விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்துள்ளனர். ஆனால் வெளியூர் வியாபாரிகள் எவரும் வராத நிலையில், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசே இந்த வருடம் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.