சென்னையில் நடந்த மகளிருக்கான விழாவில் குமாரபாளையம் மகளிருக்கு விருது
சென்னையில் நடந்த மகளிருக்கான சேவை விருது வழங்கும் விழாவில் குமாரபாளையம் மகளிருக்கு விருது வழங்கப்பட்டது.;

சென்னை சிங்கப்பெண்கள் அமைப்பின் சார்பில், மாநிலம் முழுவதும் சேவை செய்து வரும் சிறந்த மகளிருக்கான விருது வழங்கும் விழா நடந்தது. நிறுவனர் பிரேமலதா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் டாக்டர் பிரேம் ஆனந்த், சம்பத், சீனு ஜான், கராத்தே பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நந்தம்பாக்கம் எஸ்.ஐ. பவானி, ஆகியோர் பங்கேற்றனர். ரத்த தேவைக்கு உதவுதல், உடல் உறுப்பு தானம் பெற வைத்தல், கண் தானம் செய்தல், ஆதார், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், பெயர் திருத்தும் செய்ய உதவுதல், மருத்துவ காப்பீடு மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய உதவுதல்,வடிகால் பராமரிப்பு சாலை வசதி மேம்படுத்துதல், பேருந்துகள் இல்லாத பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும், குமாரபாளையம் சமூக ஆர்வலர்கள் சித்ராபாபு மற்றும் பூங்கொடி, உமையாள் ஆகியோருக்கு, சிறப்பு அழைப்பாளர்கள் விருது வழங்கி, சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர். மேலும் மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு,சேலம்,நாமக்கல், சென்னை பகுதியில் உள்ள மகளிர்களுக்கு விருது வழங்கினர்.