பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை அருகே பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது;
மதுரை அருகே சிலைமான் அருணாச்சல நாடார் தெருவை சேர்ந்தவர் கல்லாணை மகன் வசந்த் (22). இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ( மார்ச்.31)வீட்டில் தனியாக இருந்தபோது தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.