தஞ்சாவூரில், கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது 

ரவுடி கைது;

Update: 2025-04-02 14:42 GMT
தஞ்சாவூரில் விற்பனைக்காக 1.25 கிலோ கஞ்சா வைத்திருந்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் கீழவாசல் ராவுத்தர்பாளையம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் வேலாயுதம் மற்றும் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து  விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபரை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தஞ்சை கீழ வண்டிக்காரத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் அப்பாஸ் கார்த்தி (எ) கார்த்தி (27) என்பதும், அவர் விற்பனைக்காக 1.25 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பாஸ் கார்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1.25 கிலோ கிராம் கஞ்சாவையும்  பறிமுதல் செய்தனர். அப்பாஸ் கார்த்தி மீது தஞ்சை மேற்கு மற்றும் கிழக்கு  காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News