ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் பைப்லைன் உடைந்து சாலையில் பீச்சி அடிக்கும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் சாலை வாசிகள்., தண்ணீர் பஞ்சத்தில் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் பைப்லைன் உடைந்து சாலையில் பீச்சி அடிக்கும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் சாலை வாசிகள்., தண்ணீர் பஞ்சத்தில் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் பைப்லைன் உடைந்து சாலையில் பீச்சி அடிக்கும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் சாலை வாசிகள்., தண்ணீர் பஞ்சத்தில் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றியத்துக்கு உட்பட்ட சேதுநாராயணபுரம் விலக்கு அருகே அழகாபுரி சாலையின் ஓரத்தில் குடிநீர் பைப் லைன் உடைந்து தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி வருகிறது. பைப் லைன் உடைந்ததை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெயில் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலையில் பைப்லைன் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், உள்ளூர் வாசிகள், விவசாய பணிகளுக்கு சென்று வருபவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள பைப்லைன் உடைந்து தண்ணீர் வெளியேறி பீச்சி அடிப்பதில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர். ஸ்டாலின் அரசின் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையின் ஓரத்தில் உடைந்துள்ள குடிநீர் பைப் லைனை சீரமைக்க வேண்டும், தண்ணீர் பஞ்சத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.