மதுரையில் ட்ரோன் பறக்க தடை
மதுரை மாவட்டத்தில் பிரதமர் வருகையை முன்னிட்டு ட்ரோன் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.;

பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை வருகிறார். பின்னர் ராமநாத புரம் மாவட்டம், ராமேசுவரத்தில் நடைபெறும் விழாவில் பங் கேற்று, அன்றைய தினமே மதுரையிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இதையடுத்து,பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை விமான நிலையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், விமானம் பயணிக்கும் வழிகள், மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.