சம்பா சாகுபடியில் வைக்கோல் விலை இரு மடங்கு அதிகரிப்பு
காஞ்சிபுரத்தில் சம்பா சாகுபடி வைக்கோல் விலை இரு மடங்கு அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி;

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமங்களில், சம்பா பட்ட நெல் சாகுபடிக்கான அறுவடை பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. நெல் அறுவடைக்கு பின், கால்நடைகளுக்கான தீவனமாக கிடைக்ககூடிய வைக்கோலை, விவசாயிகள் விற்பனை செய்து அதன் வாயிலாக வருவாய் ஈட்டுவது வழக்கம். வாலாஜாபாத் ஒன்றியத்தின் பல பகுதிகளில், கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் நடவு செய்த நெல் பயிர்கள் தற்போது சில இடங்களில் அறுவடை செய்யப்படுகின்றன. இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், உபரியாகும் வைக்கோலை விலைக்கு வாங்கும் கால்நடை பராமரிப்போர், சீசன் துவங்கியும் வைக்கோல் விலை குறையவில்லை என கூறுகின்றனர்.