சக்தி விநயகர் கோயில் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் ஊர்வலம்
மதிகோன்பாளையம் ராமாக்காள் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ சக்தி விநயகர் கோயில் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் ஊர்வலம்;
தர்மபுரி டவுன் மதிகோன்பாளையம் ராமாக்காள் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ சக்தி விநயகர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் (4ம் தேதி) நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு மதிகேண் பாளையம் மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று காலை கங்கை பூஜை செய்யப்பட்டு கங்கை தீர்த்தம், பால்குடம் மற்றும் முளைப்பாரிகையுடன் முக்கிய வீதி வழியாக வான வேடிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். விநாயகருக்கு பால் அபிஷேகம் பக்தர்கள் செய்தனர் அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வாஸ்து ஹோமம், முதல் யாக சாலை பூஜை, திரவிய ஆஹூதி, விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. விழாவின் முக்கிய (4ம் தேதி ) அதிகாலையில் 2ம் கால யாக சாலை பூஜையும், காலை 9 மணியளவில் சக்திவிநாயகர், முருகன், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மதிகோன்பாளையம் ஊர்கவுண்டர், ஊர்தூரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.