சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு: திமுக அரசு மீது இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.;

Update: 2025-04-07 16:41 GMT
இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை கூடியது. இதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், இவ்வாறு அவர்கள் பேட்ஜ் அணிந்திருந்தனர். தொடர்ந்து அவை கூடியதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டு பேச முயன்றதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை எனக் கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர், தொடர்ந்து அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதாகைகளை பேரவையில் ஏந்தி வந்த 7 அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் அவை நடவடிக்கைகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News