நாமக்கல் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயில் சாா்பில் 60-ஆம் ஆண்டு மகா அன்னதானம்!

அன்னதான நிகழ்வை புவனேஸ்வரி ஷியாம்சுந்தர் குத்துவிளக்கேற்றி வைத்தாா், மகா அன்னதானத்தை மருத்துவா் ஷியாம்சுந்தா் தொடங்கி வைத்தாா்.;

Update: 2025-12-15 15:59 GMT
நாமக்கல்- மோகனூர் சாலையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். 60ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பலப்பட்டரை மாரியம்மன் கோவிலுக்கும், டிசம்பர் 12 ஆம் தேதி ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டனர் கோவிலுக்கும், பாதயாத்திரையாக பால்குடம் எடுத்து சென்றனர்.டிசம்பர் 10ஆம் தேதி ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. டிசம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம், மஹா தீபாராதனை, உற்சவர் மூர்த்தி திருவீதி உலா நடந்தது.
நாமக்கல் ஐயப்பன் கோயில் சாா்பில், 60-ஆம் ஆண்டு மகா அன்னதானம் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கந்தசாமி கண்டா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இந்த நிகழ்வை புவனேஸ்வரி ஷியாம்சுந்தர் குத்துவிளக்கேற்றி வைத்தாா். மகா அன்னதானத்தை மருத்துவா் ஷியாம் சுந்தா் தொடங்கி வைத்தாா். நண்பகல் 11 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற அன்னதானத்தில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உணவு அருந்தினா்.இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் ஐயப்பா சுவாமி கோயில் அறக்கட்டளைகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்,செயலாளர் சபரி சின்னுசாமி நன்றி கூறினார்,அன்னதான நிகழ்வை பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் தொகுத்து வழங்கினார்.

Similar News