மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-07 16:47 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
  • whatsapp icon
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 147 மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், குன்னூர் வசம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த திருமதி மணிமேகலை அவர்களுக்கு தனது மகளின் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜுவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற ரூ.15,000/-க்கான காசோலையினையும், கேத்தி பகுதியைச் சேர்ந்த திருமதி ஷேலி என்பவருக்கு தனது கணவரின் புற்றுநோய் மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.30,000/-க்கான காசோலையினையும், கொணவக்கரையை அடுத்துள்ள பேட்லாடா பகுதியைச் சேர்ந்த திருமதி சரோஜா தனது மகன் திரு.தர்ஷன் என்பவருக்கு மருத்துவ செலவிற்கும், இதரவாழ்வாதாரத்திற்கும் ரூ.25,000/-க்கான காசோலையினையும், கொணவக்கரை பகுதியைச் சேர்ந்த திரு.அருமைநாயகம் என்பவரின் மகன் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி என்பவதால் மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.25,000/-க்கான காசோலையினையும், உதகை, மேல்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த திருமதி சாந்தி என்பவருக்கு, தனது மகன் உடல் ஊனமுற்றவர் என்பதால் மருத்துவச் செலவிற்கும், பராமரிப்பிற்கும் ரூ.25,000/-க்கான காசோலயினையும், கூடலூர், நாடுகாணி பகுதியைச் சேர்ந்த திருமதி ஜெயஸ்ரீ என்பவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருக்கு PET Scan எடுக்க ரூ.30,000/-க்கான காசோலையினையும், என மொத்தம் 6 பயனாளிக்கு ரூ.1,50,000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியிலிருந்து வழங்கினார்.

Similar News