பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 147 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர்
அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்;

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சித்தலைவர்லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 147 மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்