மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் கொட்டாம்பட்டி ஊராட்சி திருமண மண்டபத்தில் 03-04-2025ம் தேதி இன்று காலை 10.00 மணி முதல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து 27 கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட சிறியவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரில் 35 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையும் 15 நபர்களுக்கு UDID தனித்துவ அடையாள அட்டையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிகணேஷ் ,சிறப்பு பயிற்றுநர்கள் ஆகியோர் முன்னிலையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது இதுபோல் அனைத்து ஒன்றியங்களிலும் தொடர்ந்து வரும் நாட்களில் விடுபட்ட மாற்றுத்திறனாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலர், மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.