இந்து மக்கள் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் பிறந்தநாள் விழா

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் பிறந்தநாள் விழாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்;

Update: 2025-04-03 16:56 GMT
இந்து மக்கள் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் பிறந்தநாள் விழா
  • whatsapp icon
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்தநாள் மற்றும் 40 ஆண்டுகால இந்துத்துவ பணியை சிறப்பாக செய்ததற்கு இந்து மக்கள் கட்சியின் தொண்டரணி நிர்வாகிகள் சார்பில் மாநில தொண்டரணி தலைவர் திண்டுக்கல் மோகன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் தொண்டரணி மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தொண்டரணி மாநிலத் துணைத் தலைவர் குரு ஐயப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் கருப்பு, வேலாயுதம், பாண்டி, குமார், நாகராஜ், மகேந்திரன், சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Similar News