குழந்தைகள் பாதுகாப்பு, போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி

விழிப்புணர்வு பயிற்சி;

Update: 2025-04-03 17:00 GMT
தஞ்சாவூரில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து மாவட்ட அளவிளான விழிப்புணர்வு பயிற்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.  தஞ்சாவூர் பாரீஸ் ஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து மாவட்ட அளவிளான விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வியாழக்கிழமை  நடைபெற்றது. முகாமில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் என சுமார் 750 பேருக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.அண்ணாதுரை, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித், மாவட்ட உதவி ஆணையர் (கலால்) பூஷண குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் சுந்தர், அய்யாகண்ணு, மதியழகன், பழனிவேல், உதவித் திட்ட அலுவலர் ரமேஷ், முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News