மது போதையில் தகராறு, பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞரை தாக்கிய சிறுவன் கைது 

சிறுவன் கைது ;

Update: 2025-04-03 17:15 GMT
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், (33) மீனவர். இவர் கடந்த 1 ஆம் தேதி, சேதுபாவாசத்திரம் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அப்போது அதே இடத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தார் . இந்நிலையில் 17 வயது சிறுவன் வெங்கட்ராமனிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பணம் தர வெங்கட்ராமன் மறுத்து திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன் பீர் பாட்டிலால் வெங்கட்ராமனை தலையில் அடித்து விட்டு தப்பிச் சென்றார்.  இதில் காயமடைந்த வெங்கட்ராமன் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வெங்கட்ராமன் அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி 17 வயது சிறுவனை  கைது செய்து தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

Similar News