மத்தூர்: மாணவியை காதலிக வற்புறுத்திய வாலிபருக்கு காப்பு.
மத்தூர்: மாணவியை காதலிக வற்புறுத்திய வாலிபருக்கு காப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (18) இவர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரிஷ் அந்த மாணவியை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தவதாக கூறப்படுகிறது.இதை அடுத்து மாணவி தன்னை ஹரிஷ் காதலிக்க தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருவதாக மத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் ஹரிஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.