கோவை: மருதமலை-வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம் !

பக்தர்களால் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-04-04 05:28 GMT
பக்தர்களால் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன்படி கடந்த மாதம் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு மங்கள இசை திருமறை திருமுறை பாராயணம் விநாயகர் பூஜை இறை அனுமதி பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை முதல் கால வேள்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி நடைபெற்றது. திருச்சுற்று தெய்வங்கள், அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது. அதன்படி அதிகாலை 4:30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமுறை பாராயணம், ஆறாம் கால வேள்வி நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 6:45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7:30 மணிக்கு யாகசாலையிலிருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மருதாச்சல மூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சல மூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Similar News