சோளிங்கரில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம்
மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம்;

சோளிங்கர் கோட்டத்திற்கு உட்பட்ட சோளிங்கர், பொன்னை, மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், பாணாவரம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், ஓச்சேரி பிரிவுக்கு உட்பட்ட நுகர்வோர் சிறப்பு குறைதீர்வு முகாம் நாளை (சனிக்கிழமை) சோளிங்கர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் வீடு, வணிக நிறுவனங்களில் மின் கணக்கீடு, பழுதடைந்த மீட்டர் மற்றும் பழுதடைந்த மின்கம்பங்கள், குறைந்த மின் அழுத்தம் போன்ற குறைபாடுகள் இருந்தால் முகாமில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையு மாறு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.