ஜீப்பில் கடத்திய குட்கா பறிமுதல்
காரிமங்கலம் அருகே ஜீப்பில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்;

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட எஸ்பி மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காரிமங்கலம் காவலர்கள் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சா லையில், அகரம் பிரிவு பகுதியில் இன்று அதிகாலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு ஜீப்பை காவலர்கள் நிறுத்தினர். ஜீப்பை நிறுத்திய டிரைவர், கீழே இறங்கி தப்பியோடி விட்டார். ஜீப்பை சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 10 மூட்டைகளில் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, சேலத்துக்கு குட்கா கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 300 கிலோ குட்கா பொருட்களுடன், கடத்த லுக்கு பயன்படுத்திய ரூ.7 லட்சம் மதிப்புள்ள சொகுசு ஜீப்பை பறிமுதல் செய்த காவலர்கள், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.