
குமரி மாவட்டம் அருமனை பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அதன் நிர்வாக இயக்குனர் ரகுராஜன் என்பவரிடம் குறைந்த விலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மிலிட்டரி கேண்டினில் இருந்து வாங்கி தருவதாக ஒருவர் ரூ. 43 ஆயிரத்து 500 பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக அரண்மனை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான செய்திகள் வெளியானது. இதை அடுத்து மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தனியார் பாரில் அந்த நபர் தினம் செல்வதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து அருமனை பகுதி சேர்ந்த மக்கள் இணைந்து நேற்று காலை தனியார் பாருக்கு ஆர்மி என்று எழுதப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் பணம் ஏமாற்றி வாங்கியவர் என தெரிய வந்தது. பின்னர் அவரை பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சென்னை போரூர் பகுதியை சேர்ந்த ஆங்கிலோ இந்தியன் என்பது தெரிய வந்தது. அவர் தற்போது மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவர் சென்னையில் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி இருப்பதும், இவர் கடந்த மாதம் மட்டும் குமரி மாவட்டத்தில் ரூபாய் 2 லட்சத்துக்கும் மேல் பல நிறுவனங்களில் ஏமாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.