பைக் திருடிய  வாலிபர் கைது

மார்த்தாண்டம்;

Update: 2025-04-04 05:47 GMT
பைக் திருடிய  வாலிபர் கைது
  • whatsapp icon
குமரி மாவட்டம் கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜமீல் (34) இவர் மார்த்தாண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவ தினம் ஜமீல் தனது பைக்கில் கடைக்கு சென்றார். பைக்கை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றவர், பின்னர் வெளியே வந்து பார்த்த போது  பைக்கை காணவில்லை.       இது குறித்து ஜமீல் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது துணிக்கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.      இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டது வன்னியூர் பகுதியை சேர்ந்த மனோஜ் (26) என்பது தெரிய வந்தது. போலீசார் மனோஜை கைது செய்து,  ஜமீலுக்கு சொந்தமான பைக்கை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News