திமுக-பாஜக பிரமுகர்கள் மோதல்
ஒரே மாதிரி 2 கார்கள் நம்பர் போர்டு குழம்பிப்போன காவல் அதிகாரிகள்;
ஒரே மாதிரி 2 கார்கள்: திமுக-பாஜக பிரமுகர்கள் மோதல் அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் இவர் திமுகவில் ஒன்றிய பொறுப்பில் உள்ளார் இவரிடம் TN46 X1180 என்ற பதிவு எண் கொண்ட கார் உள்ளது. இதே பதிவு எண் கொண்ட அதேபோன்ற இன்னொரு கார் பாஜக-வின் மாநில பொறுப்பில் உள்ள பிச்சமுத்து என்பவரிடம் இருப்பது தெரிய வந்தது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 2 கார்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.