
புதுக்கோட்டை, பொன்னமராவதி அருகே நாட்டுக்கல் வீதியில் லாட்டரி சீட்டு விதிக்கப்படுவதாக பொன்னமராவதி போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் பத்மா தலைமையில் சென்ற காவல்துறையினர் அங்கு சென்று லாட்டரி விற்றுக் கொண்டிருந்த நல்லூரை சேர்ந்த காமராஜ் மற்றும் குரும்பலூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.