அய்யம்பாளையம் காலனி அருகே ஆசிரியர் டூ வீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து.
அய்யம்பாளையம் காலனி அருகே ஆசிரியர் டூ வீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து.;
அய்யம்பாளையம் காலனி அருகே ஆசிரியர் டூ வீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கீழ சக்கரக்கோட்டை அருகே உள்ள இளையபெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி வயது 53. இவர் அருகில் உள்ள கஸ்தூரி குரும்பப் பட்டி பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், மணப்பாறை- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அய்யம்பாளையம் காலனி அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிவசாமியை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சிவசாமியின் மனைவி இந்திராணி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிவசாமி மீது வழக்கு பதிவு செய்தனர் வெள்ளியணை காவல்துறையினர்.