முனிராஜா சுவாமி நான்காம் ஆண்டு குருபூஜை

குமாரபாளையம் கே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனிராஜா சுவாமிகளின் நான்காம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.;

Update: 2025-04-04 13:06 GMT
முனிராஜா சுவாமி நான்காம் ஆண்டு குருபூஜை
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனிராஜா சுவாமிகளின் நான்காம் ஆண்டு குருபூஜை விழா, கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்தது. முனிராஜா சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. பிரார்த்தனை பாடல்கள் எனும் நூலை வசந்தகுமாரி முனிராஜா, கல்வி நிறுவன செயலர் கஸ்தூரி பிரியா, நிர்வாகி கிருபாகர் முரளி வெளியிட, மதுரை டாக்டர் கேசவமூர்த்தி பெற்றுகொண்டார். பெங்களூர் குருபிரசாத்தின் ராமாயண சொற்பொழிவு, சம்பு இசைக்குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தாஸ்ரமம் குரு பூர்னானந்த சுவாமி, நெரூர் கைலாஷ் ஆஸ்ரம முதல்வர் யோகேசானக்ரா, காஞ்சிபுரம் நிடுமாமிடி மடாதிபதி சிதாபானந்த சுவாமி, இணை நிர்வாக இயக்குனர் ஸ்ரீநித்யா உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News