ஊத்தங்கரை:குடிநீர் இல்லா பள்ளி கண்டு கொள்வார்களா அதிகாரிகள்?

ஊத்தங்கரை:குடிநீர் இல்லா பள்ளி கண்டு கொள்வார்களா அதிகாரிகள்?;

Update: 2025-04-04 13:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கோவிந்தாபுரம் அரசுஉயர்நிலைப்பள்ளியில் ஆழ்துளை கிணறு பழுது மற்றும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கு 250 மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அங்குள்ள விவசாய மோட்டாரில் இருந்து குடிநீர் எடுத்து வரப்படுகிறது. பள்ளியின் நீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Similar News