மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-04 13:53 GMT
அரியலூர், ஏப்.4- மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜும்மா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமையான நேற்று அனைத்து இஸ்லாமியர்களும் தொழுகை முடிந்து முன்பு பள்ளிவாசல் நுழைவாயில் முன்பு எஸ் டி பி ஐ கச்சி அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமீன்சுல்தான் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 160-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உட்பட எஸ் டி பி ஐ கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News