கார் மோதி தொழிலாளி சாவு
கார் மோதி தொழிலாளி சாவு வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
வெள்ளகோவில் கச்சேரி வலசையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 56). திருமணமாகாத இவருக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர். கச்சேரி வலசில் தங்கம்மாள் என்கிற ஒரு சகோதரி வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த சுரேஷ் 13-ந்தேதி வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் எதிரில் இந்திரா நகர் செல்லும் வழியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் சேலம் அரசு தலைமை மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுரேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக வெள்ளகோவில் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் முருகன் (55) மீது வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.