சாலையில் உலா வந்த காட்டு யானை

வாகன ஓட்டிகள் அச்சம்;

Update: 2025-04-04 15:49 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த மூன்று காட்டு யானைகள் வனத்துறையினர் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.. சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் அதிக வறட்சி காணப்படுவதால் காட்டு யானைகள் உண வு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டத்தை நோக்கி வருவது வழக்கம் இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பரலியார் கோழிக்கரை அருகே மூன்று காட்டு யானைகள் சாலையில் உலா வந்தது அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த குன்னூர் வனத்துறையினர் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகள் சாலை கடக்க பாதுகாப்பு அளித்தனர் பகல் வேளையில் காட்டு யானைகள் சாலையில் வந்ததால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காட்டு யானைகளை கண்டு ரசித்தனர்.

Similar News