காங்கேயம் பேருந்து நிலையத்தில் செயல்படாத ஏடிஎம் மையங்கள் பொதுமக்கள் அவதி

காங்கேயம் பஸ் நிலையத்தில் செயல்படாத ஏ.டி.எம்.மையங்கள் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை;

Update: 2025-04-04 16:10 GMT
காங்கேயம் பஸ் நிலையத்தில் செயல்படாத ஏ.டி.எம். மையங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கேயம் பஸ் நிலையத்தில் தனியாருக்கு சொந்தமான இரண்டு ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 4 பணம் எடுக்கும் எந்திரங்கள் உள்ளன. ஆனால் எப்போதும் குறைந்தபட்சம் 3 எந்திரங்கள் இயங்குவதில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். பஸ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களின் அவசர தேவைக்காக பஸ் நிலையத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது காங்கேயம் பஸ்நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் இரண்டும் அடிக்கடி நெட்வொர்க் இணைப்பு துண்டிப்பு பிரச்சினை, மின்சாரம் துண்டிப்பு, பணம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பணத்தேவைக்காக பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் சாலைக்கும், சென்னிமலை சாலைக்கும் சென்று வருகின்றனர். 5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தால் மட்டும் சேவை வரி எடுக்கும் வங்கிகள் செயல்படாத ஏ.டி.எம். மையத்தை ஏன் திறந்து வைக்கின்றனர் என புலம்பி கொண்டு செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வங்கிகள் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும் எனவும், இப்பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News