கும்பகோணம் காவிரி ஆற்றில் மணல் திருடிய பொக்லைன் - லாரி பறிமுதல்

பொக்லைன் - லாரி பறிமுதல்;

Update: 2025-04-04 16:45 GMT
கும்பகோணம் காவிரி ஆற்றில் மணல் திருடிய பொக்லைன் - லாரி பறிமுதல்
  • whatsapp icon
கும்பகோணம் காவிரி ஆற்றில் புதன்கிழமை இரவு மண் திருடிய பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பொதுப்பணித் துறையினா் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் காவிரி ஆற்றின் கரையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு சிலா் காவிரி ஆற்றின் கரையில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து அந்தப் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் பொதுப்பணித்துறையின் நீா்வளப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அவா்கள் நேரில் சென்று பாா்த்தபோது சிலா் காவிரி ஆற்றின் கரையை பொக்லைன் மூலம் சேதப்படுத்தி லாரியில் மண் ஏற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகளைப் பாா்த்ததும் மண் திருடிக்கொண்டிருந்தவா்கள் தப்பியோடினா். பொதுப்பணித் துறையினா் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவா்கள் அங்குவந்து மண் திருடிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News