
கும்பகோணத்தில் வியாழக்கிழமை பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்த காய்கனி வியாபாரி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பெருமாண்டி பிரதான சாலையைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (55). காய்கனி வியாபாரி. இவருக்குத் திருமணமாகி, மனைவி மற்றும் 4 பிள்ளைகளை கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்துவந்தாா். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த அருகிலிருந்தவா்கள் கதவைத் திறந்து பாா்த்த போது காா்த்திகேயன் படுக்கையிலேயே இறந்துகிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுபாஷ் தலைமையில் போலீஸாா் அங்கு வந்து சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.