பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா

தாராபுரத்தில் பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா மாவட்டம் முழுவதும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-04 23:54 GMT
பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா
  • whatsapp icon
தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ருத்ரகுமார், ஓ.பி.சி.அணி மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ், கூட்டுறவு பிரிவு செயலாளர் சுகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கட்சியின் ஸ்தாபன தினத்தை முன் னிட்டு ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மாநில செயலாளர் நந்தகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கட்சியின் தொடக்க நாளை எவ்வாறு கொண்டாடுவது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் தாராபுரம் காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News