புகையிலை தடுப்பு நடவடிக்கை விதி மீறிய கடைகளுக்கு அபராதம் விதிப்பு
காங்கேயம் அருகே புகையிலை தடுப்பு நடவடிக்கை விதி மீறிய கடைகளுக்கு அபராதம் விதிப்பு;

திருப்பூர் மாவட்ட சுகாதார அலுவலர் உத்தரவின் பேரில் குண்டடம் வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீசுகு தலைமையில் நேற்று புகையிலை விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஊதியூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்த நெறி முறைகளை கடை உரிமையாளர்கள் கடைபிடிக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் விதிமீறிய கடைகளின், குறைபாடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக சமூக பணியாளர் மற்றும் மனநல ஆலோசகர், குண்டடம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்கள், காவல்துறை சார்பில் காவலர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 12 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.