ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாலைப்பொழுதில் கொட்டித்தீர்த்த கனமழை*
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாலைப்பொழுதில் கொட்டித்தீர்த்த கனமழை*;

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாலைப்பொழுதில் கொட்டித்தீர்த்த கனமழை குமரிக்கடலில் வளிமண்டல சூழற்சி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம், வடச்சேரி, குமாரமங்கலம், மிட்டாளம், பைரப்பள்ளி, விண்ணமங்கலம் மற்றும் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் மாலைப்பொழுதில் கனமழை வெளுத்து வாங்கியது, காலை முதல் வெயிலில் வாடிய பொதுமக்கள் இந்த கனமழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.